களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாணவி மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மாணவரின் தந்தை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் எனவும், அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.