தற்போது கொவிட்-19 திடீர் பரம்பல் காரணமாக நாட்டில் எழுந்துள்ள சூழலில், வைத்தியசாலைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் முற்பாதுகாப்பு நடைமுறைகளான முகக் கவசத்தினை கட்டாயம் அணிதல், ஆட்களுக்கு இடையில் ஆகக் குறைந்தது ஒரு மீற்றர் சமூக இடைவெளியினைப் பேணுதல், மற்றும் கைகழுவுதல் ஆகியவற்றினைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்கு மேலதிகமாக, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது உறவுகளைப் பார்வையிடச் செல்வதனை இயலுமானவரை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்குத் தேவையான பொருட்களை வழங்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர்களை நேரடியாக விடுதிகளில் சந்திப்பதைத் தவிர்த்துப் பொருத்தமான வழிகளில் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு கோரப்படுகின்றனர்.
அத்துடன், அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கு வதிவிடங்களுக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையினை நாடுமாறும் சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
-சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்