மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய நபர் காரணமாக, கொழும்பு ரோயல் கோல்ப் கழகம் மூடப்பட்டுள்ளது.
ரோயல் கோல்ப் கழகத்தின் தோட்டப்பணியாளர் ஒருவரின் மகள் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிகின்றார்.
குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொழும்பு ரோயல் கோல்ப் கழகம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
கோல்ப் கழகத்தின் பூந்தோட்ட பணியாளரைம் குடும்பத்தினரையும் நாளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தவுள்ளனர்.
குறித்த்நபர் மூன்றாம் திகதி வரை பணிபுரிந்தார் என கோல்வ் கழகம் அறிவித்துள்ளது.
கோல்ப் கழகத்தின் தோட்டப்பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.