கொழும்பில் உள்ள பெண்களுக்கான காஸில் வீதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
அந்த பெண் சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மினுவாங்கொடை கொரோனா தொற்று கொத்தணியுடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா எனவிசாரணை நடத்தப்பட்டு வருகின்றதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.