கொரொனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாளை (07) மற்றும் 08, 09 ஆம் திகதிகளில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும், பிராந்திய அலுவலகங்களுக்கும் பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, அலுவலக நேரங்களில் (மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரை) கீழ்க் காணும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவுடன் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு பொது மக்களுககு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுப் பிரிவு -
070-7101060 / 070-7101070
குடியுரிமைப் பிரிவு -
070-7101030
வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு -
011-5329233 / 011-5329235
வீசா பிரிவு -
070-7101050
dcvisa@immigration.gov.lk
acvisa1@immigration.gov.lk
acvisa2@immigration.gov.lk
acvisa@immigration.gov.lk
துறைமுகப் பிரிவு -
077-7782505