கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்ட மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியரான பெண் முதலாவது கொரோனா தொற்றாளர் இல்லை என இனங்காணப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்குள் சுவாச பிரச்சினைகள் இருந்து வந்ததாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முதலாவதாக கொரோனா தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட நபருக்கு தொழிற்சாலையினுள் வைத்தே வைரஸ் தொற்றி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.