உள்நாட்டு மருந்து உற்பத்தியை முன்னெடுக்கும் வகையில், மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது.
ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையமே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள், 13.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்க்பட்டது.
மேலும், இலங்கைக்கு ஆண்டுதோறும் 1.8 பில்லியன் மருந்து மாத்திரைகள் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்த உற்பத்தி நிலையத்தின் ஊடாக எதிர்காலத்தில் உள்ளூர் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்து கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுபீட்சமான தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக உள்நாட்டு ஒளடத உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த திட்டம் ஆரம்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.