மினுவன்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் 190 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 1,022 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.