கனிம வளங்களை அகற்றிய பிறகு விற்கப்படும் மணலில் அசாதாரண கதிரியக்கத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன நடத்திய ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புல்மூட்டை கனிம மணல் கூட்டுத்தாபனம் மற்றும் தம்புள்ளை கனிம பிரித்தெடுப்பில் மீதமுள்ள மணலில் கதிரியக்கத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானின் புகுஷிமா மலையிலிருந்து தற்போதைய கதிர்வீச்சின் அளவை விட மணல் நிமிடத்திற்கு 500 அலகுகளுக்கு மேல் கதிர்வீச்சை வெளியிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மணல் டென்டர்கள் பெற்றுக் கொள்ளும் தம்புள்ளை கனிம மணல் நிறுவனம் 7 - 8 மீற்றர் உயரத்தில் மணலை சேரித்து வைத்துள்ளது. இந்த மணல் காற்றில் அடித்து செல்லும் போது அவை சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் புற்றுநோய் அபாயத்திலிருந்து தப்ப முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்து.