ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இதனால் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என அவர் கூறினார்.
ரிப்கான் பதியூதீன் திடீரென விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பையும் வெளியிட்டார்.
குறிப்பாக, மேற்படி சந்தேக நபருக்கு ஈஸ்டர் தாக்குதலில் பங்கெடுத்திருந்த குண்டுதாரி ஒருவருடன் நேரடி தொடர்பு இருந்துள்ளதெனவும், அது தொடர்பாக உறுதி செய்யப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் செய்திகளில் கூறியிருந்தமைக்கான ஆதாரங்களும் தம்மிடம் உள்ளது என்றார்.
எவ்வாறாயினும், இவ்வாறான குற்றவாளிகளை விடுவிப்பதால் ஆளும் தரப்புக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் ரகசிய ‘டீல்’ இருக்கிறனாவென சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவித்தார் அவர்.
இந்த விசாரணைகள் நியாயமாக இடம்பெறுமா என்ற அச்ச உணர்வு தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.
அதனால், இந்த விடயம் தொடர்பாக கிறிஸ்து மத எம்.பிக்கள் மாத்திரமின்றி, சகல எம்.பிக்களும் ஆராய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.