இலங்கையில் கொரோனா பரவல் தேசிய தடுப்பு மையம் அல்லது சுகாதாரத் துறை பரிந்துரைத்தால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொள்ளும் போது 2021ஆம் ஆண்டளவிலேயே இந்த விமான நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையர்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடரந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலானது குளிர்காலத்தில் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் நடவடிக்கையானது மேலும் காலதாமதமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}