சிறையிலிருந்து வெளியில் வந்த இளம் பெண்ணொருவர் 102 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்றிரவு மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனிட் 07, முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சந்தேகநபரான பெண் திருகோணமலை சிறைச்சாலையில் இரண்டு கிலோகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருடம் சிறைதண்டனை அனுபவித்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சிறிய மேசையொன்றின் அடிப்பகுதியில் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 102 கிராம் கேரளா கஞ்சா சிக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண்ணை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவரை கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.