இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து பணிபுரியும் 64 தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை இறந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் 2,600 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
ஜோர்தானில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் 350 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.