மினுவாங்கொடை தொழிற்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமான ஆடை தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஆடைதொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டு தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தபட்டதாக தோன்றிய பின்னர் மினுவாங்கொடையில் மீண்டும் நோய் பரவல் காணப்படுவது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு கருணையுடன் உணர்வுபூர்வமான விதத்தில் தீர்வை காணவேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேலைவாய்பினை வழங்கும் நிறுவனங்களால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகின்றளர் என தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள் அவர்கள் மினுவாங்கொடை கட்டுநாயக்க சீதுவை வெலிசரையில் தொழில் புரிகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளன.
$ads={2}
இந்த தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலையின் நிரந்தர தொழிலாளர்கள் இல்லை இவர்கள் பல தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மேலும் குறிப்பிட்ட தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேளை தொழிற்சாலை அதனை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளது.
சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைக்குள் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் அதிகாரிகள் தங்கியிருந்தனர் அவர்கள் நிறுவனத்தின் ஏனைய தொழிற்சாலைகளுக்கும் சென்றனர் அந்த தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தொழிற்சாலைகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக பொது கட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான பரவலை தடுப்பதற்காக தொழிற்சாலைகளில் நோய் பரவலை கண்டுபிடிப்பதற்கான சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
$ads={2}