தெரு நாய் ஒன்றினால் சில நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்ட 13 வயது சிறுவன் கராபிட்டி போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட பின் இறந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு மாபலகம்ச் பகுதியில் மேலதிக வகுப்பிற்கு செல்லும் வழியில் பஸ் தரிப்பிடத்தில் வைத்தே குறித்த இளைஞன்தாக்கப்பட்டுள்ளான்.
இருப்பினும், இளைஜனின் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 26 அன்று உடுகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் கராபிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது திங்கட்கிழமை இரவு (28) இறந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாபலகமவில் உள்ள பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவர் கவேஷ் நேத்ஸர என அடையாளம்காணப்பட்டுள்ளார்.
சிறுவனின் பிரேத பரிசோதனை காலி நீதித்துறை மருத்துவ அதிகாரியால் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றன.
உடுகம மருத்துவமனையின் இயக்குநர் ஜெனரல் சுசாந்தா பெர்னாண்டோ, தாக்குதல் நடந்த உடனேயே சிகிச்சை பெற்றிருந்தால்சிறுவனை காப்பாற்றியிருக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இறந்த சிறுவனின் உடல் பாகங்களை மருத்துவ பரிசோதனை நிறுவனத்தில் மேலதிக பரிசோதனைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை (26) யதமத்தை பகுதியிலும் இவ்வாறான தெரு நாய் ஒன்று தாக்கப்பட்டதில் 54 வயது நபரும் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.