மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் செப்டம்பர் மாதம் தரையிறங்கிய சாட்டர் விமானம் (Charter Flight) குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.
அண்மையில் இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக மினுவங்கொட உள்ள ஆடை தொழிற்சாலையால் இயக்கப்பட்ட சாட்டர்விமானங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிலைய இயக்குநர் ஷெஹான் சுமனசேகர, செப்டம்பர் 22 ஆம் தேதி UL1160 விமானத்தில் 48 பயணிகள் மத்தலை விமான நிலையத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.
$ads={2}
விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், யாரும் இந்தியர்கள் அல்ல என்றும்சுமனசேகர மேலும் தெரிவித்தார்.