அரசியல் கட்சிகள் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலர் சமர்ப்பித்த 39 மனுக்கள் மீதான தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சபாநாயகர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தது.
சபாநாயகர் 20ஆவது திகதி நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வெளியிடுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த ஆவணம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வெளியாகியுள்ளது.
கசிந்தது உண்மையான ஆவணமா என்பது குறித்து சந்தேகம் காணப்படுகின்றது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
$ads={2}
எனினும் கசிந்த ஆவணம் உண்மையானது என பல அரசமைப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர் என இக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.
வெளியாகியுள்ளது உண்மையான ஆவணம் என்றால் அது ஏமாற்றமளிக்கும் விடயம் என 20ஆவது திருத்தத்தினை எதிர்த்த சட்டத்தரணிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
20ஆவது திருத்தத்திற்கான அங்கீகாரத்தினை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பெறுமாறு நீதிமன்றம் தெரிவிக்கும் என எதிர்பார்த்ததாக தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் எனினும் வெளியாகியுள்ள ஆவணத்தின் மூலம் நீதிமன்றம் மூன்றில் இரண்டு மூலம் 20ஆவது திருத்தத்தினை நிறைவேற்றலாம் என தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பிற்கு உத்தரவிடும் அதனை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான பரந்துபட்ட கூட்டணியை கட்டியெழுப்பலாம் என எதிர்கட்சிகள் எதிர்பார்த்திருந்தன.
20ஆவது திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளமை ஏமாற்றமளித்துள்ளது என அரசமைப்பு சட்டத்தரணி அசங்க வெலிகல தெரிவித்துள்ளார்.
$ads={2}