2004 சுனாமி பேரழிவின் போது காணாமல் போன 5 வயது சிறுவனை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாக சம்மாந்துறை பகுதியில் ஒரு பெண் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை குறித்து போலீசார் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அந்த சிறுவனை தத்தெடுத்து வளர்த்தாக கூறப்படும் அம்பாறை - புத்தங்கல பகுதியில் வசிக்கும் நூருல் இன்ஷான் எனும் 42 வயது பெண் சம்மந்துறை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகார் ஒன்றின் பின்னரே பொலிஸார் இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு, சுனாமியின் பின்னர் காணாமல் போன தனது மகன் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாக அபுசாலி சித்தி ஹமாலியா எனும் பெண் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சம்மந்துறை - மாலிகைகாடு பகுதியில் சுனாமி தாக்கியபோது, அச்சமயம் 5 வயதாக இருந்த அவரது மகனான ராஸீன் முகமது அக்ரம் ரிஸ்கான் காணாமல் போயுள்ளதாக அவர் கூறினார்.
$ads={2}
அவர் பல ஆண்டுகளாக தனது மகனைத் தேடி வருவதாகவும், அவரை அம்பாறையில் ஒரு பெண் தத்தெடுத்ததாக அவருக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். தனது மகன் என அடையாளம் காணித்து கூறிக்கொண்ட அந்த இளைஞனும் குறித்த அறிக்கையை வெளியிட்டபோது அவருடைய வீட்டில் இருந்தார்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞரிடம் பெறப்பட்ட அறிக்கையொன்றில், தன்னிடம் இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் இருப்பதாகவும் இதனால் குழப்ப நிலையில் இருக்கும் அவர் தனது தாயார் யார் என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் குழந்தையாக இருந்தபோது தங்கியிருந்த தனது தாயின் வசம் உள்ள பிறப்புச் சான்றிதழில், அவரது பெயர் முகமது சியான் என்றும், அவர் அம்பாறையில் சத்தாதிஸ்ஸ கல்லூரியில் படித்தவர் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த பிரச்சினையை தீர்க்க அம்பாறை - புத்தங்கலவில் வசிக்கும் குறித்த இளைஞர் மற்றும் அம்பாறை - புத்தங்கல பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணும் நேற்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். குறித்த இளைஞனின் தாயார் என உரிமை கோரும் பெண்ணுக்கும் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதேநேரம், அம்பாறை - புத்தங்கல பகுதியில் வசிக்கும் நூருல் இன்ஷான் எனும் பெண், இந்த இளைஞனை தான் பெற்றெடுத்ததாகக் கூறுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை பகுதிக்கு பொறுப்பான சிறேஷ்ட பொலிஸ் அதிகாரியிடம் வினவியபோது, இது தரப்பினருக்கும் பாதகம் இலைக்காத வகையில் DNA பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.