இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை அடுத்த ஆண்டின் இடைப்பகுதியில்தான் உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கிறது. தடுப்பு மருந்துகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பே தற்போது முக்கியம். கொரோனா தடுப்பு மருந்து குறித்து இன்னும் முழுமையான சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.
$ads={1}
உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே உலக நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கொரோனா முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.