இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய மக்களுடன் மக்களாக இணைந்து செயற்படுவதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வீதியில் பயணிக்கும் போது, பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில், போக்குவரத்து சட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியும் பயணித்துள்ளார்.
$ads={1}
கொழும்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள வீதி சமிக்ஞை ஒன்றில் ஜனாதிபதியின் வாகன தொடரணி நிறுத்தப்பட்டிருந்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மக்களுடன் சாதாரண குடிமகனாக செயற்படுவது வரவேற்கத்தக்கது என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.