தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பாணந்துறை பொலிஸார் கடந்த புதன்கிழமை (09) சந்தேக நபரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் நடத்திய விசாரணையை தொடர்ந்து உப அதிபர் கைது செய்யப்பட்டார்.
உதவி அதிபரின் வீட்டிற்கு அருகில் உள்ள சிறுவன் சிங்கள பாடத்தில் பலவீனமாக இருந்ததால், உப அதிபரின் சிறப்பு வகுப்பிற்கு சென்று வந்துள்ளார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் உதவி அதிபரின் இல்லத்தில் தனியாக வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வகுப்புகளின் போது, கடந்த ஜூலை மாதம் பல சந்தர்ப்பங்களில் சிறுவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் வகுப்பிற்கு வருமாறு உப அதிபர் தொந்தரவு தந்ததாக சிறுவனின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் சிறுவன் குறித்த ஆசிரியரின் தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அதற்கான காரணத்தை பெற்றோர் விசாரித்தபோது, சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தாயார், தனது சகோதரனுடன் உப அதிபரின் வீடு தேடி சென்று உப அதிபரை தாக்கியுள்ளார்.
அவர்களை உப அதிபரின் மனைவி சமரசம் செய்து வீட்டிற்குள் அழைத்து சென்று விடயத்தை வெளியில் விடாமல் இருங்கள் என கூறி ஒரு லட்சம் ரூபா வழங்கியுள்ளார்.
உப அதிபர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.