மட்டக்களப்பில் அரச அதிகாரிகளை தங்கள் கடமைகளைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அம்பிட்டிய சுமண ரதன தேரருக்கு மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தில் இதுதொடர்பில் கருத்துக்களை முன்வைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலிய சேனரத்ன, குறித்த தேரரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாரும், காவல்துறையினரிடம் ஓர் அறிக்கை பதிவு செய்ய வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, செங்கலடியில் உள்ள தொல்பொருள் இட ஒதுக்கீடு நிலத்தை வரையறுக்க தாமதம் ஏற்பட்டதால் சுமண ரதன தேரர் நேற்று (21) ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தொல்லியல் துறை அதிகாரிகளை மிரட்டியும் தாக்கியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒரு அதிகாரியின் கழுத்தை நெசுக்கி அச்சுறுத்தியதாகவும், அந்த இடத்திற்கு தனது மேலதிகாரிக்கு வருமாறு அவரை கோரியதாகவும் கூறப்படுகிறது.