லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா - சீனா இராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் வலுத்து வருகிறது. இதனால் TIKTOK உட்பட 58 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் சீனா தனது இராணுவத்தை பின்வாங்க மறுத்தது. கடந்த சில தினங்களாக மேலும் சீன இராணுவம் அத்துமீறியுள்ளது.
இந்நிலையில் Baidu, Baidu Express Edition, Tencent Watchlist, FaceU, WeChat Reading, Ludo All Star, Alipay, Tencent Weiyun மற்றும் Rise of Kingdoms: Lost Crusade உட்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.