சமூக ஊடகங்களில் தாய்மார்களுக்கு பங்கம் விளைவிக்குமாறு ‘அம்மலாட ஆச கொல்லோ’ என்ற அவதூறான பேஸ்புக் குழுமத்தை பராமரித்த குற்றச்சாட்டில் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீஸ் கான்ஸ்டல் ஒருவரை கைது செய்துள்ளது.
பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, சிஐடியின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளைதொடடங்கியது, இதனை அடுத்து 27 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் ஒரு பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு வருடத்திற்கு முன்னர் பொலிஸ் சேவைக்கு உள்வாங்கப்ப்ட்டார் என்றுகாவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கம்பாஹாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்தார், திருமணமாகாத நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணையில் கிட்டத்தட்ட 600 நபர்கள் பேஸ்புக் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.