இன்று (18) பிற்பகல் 04.00 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து முறக்கொட்டாஞ்சேனை நோக்கி பயணித்த காரானது, செங்கலடி பிரதான வீதியில் வைத்து கட்டுப்பாபாட்டை இழந்து பக்கம் மாறி பயணித்ததால், வீதியோரமாக நடந்துசென்றவரும், அவர் அருகே துவிச்சக்கர வண்டியில் சென்றவரும் அக்காரினால் அல்லுண்டு செல்வதை CCTV பதிவு மூலம் காணக்கிடைத்தது.
துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிர்பலியானவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.