தனிப்பட்ட நபர்களின் தகவல் திருடும் செயலிகள்; இலங்கை அரசு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிப்பட்ட நபர்களின் தகவல் திருடும் செயலிகள்; இலங்கை அரசு எச்சரிக்கை!


இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் செயலிகள் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, ஆபத்து உள்ளதா என்ற விடயத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் கணினி மற்றும் கையடக்க தொலைபேசி செயலிகள் தொடர்பில் உலகளவில் கடந்த நாட்களாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.


அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் பல்வேறு கையடக்க தொலைபேசி செயலிகளுக்கு தடை விதித்தது.


எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சைபர் யுத்தம் போன்ற செயற்பாடுகளுக்காக கையடக்க தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தரவுகளை பயன்படுத்த முடியும் என்பது தொழில்நுட்ப பிரிவின் நிலைப்பாடாகும்.


எனவே, இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.