கச்சா எண்ணெயுடன் இந்தியா சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் இலங்கை கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவர் காயமடைந்ததுடன், மற்றொருவர் மாயமாகி உள்ளார். மாயமாகிய மர்ம நபர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘நியூ டைமண்ட்’ கப்பல், குவைத்தில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலில் மாலுமி, பொறியாளர்கள் என 23 ஊழியர்கள் இருந்தனர். இந்த கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்தபோது அதன் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அது கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் கப்பலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
$ads={1}
இதற்கிடையே கப்பலில் இருந்த ஊழியர்கள் 19 பேர் உயிர்காக்கும் படகுகள் மூலம் கப்பலில் இருந்து வெளியேறினர். அவர்களை இலங்கை கடற்படை கப்பல்கள் மீட்டன. மேலும் கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது.
எனினும் கப்பலில் இருந்த மற்றொரு ஊழியர் மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதைப்போல மீட்கப்பட்ட ஊழியர்களில் என்ஜினீயர் ஒருவர் காயமடைந்திருந்தார். அவர் கடற்படை படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
$ads={2}
தீ விபத்து ஏற்பட்ட கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கு கரையில் இருந்து 180 மைலுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணிகள் வேகமாக நடந்தன. இந்த சம்பவத்தால் இலங்கை கடற்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
#FireFighting in progress in consultation with Master of #MTNewDiamond onboard #ICG ship Shaurya along with Tug APL Winger.Additional #ICG ship Ameya & Abheek being deployed #today in PR configuration to augment efforts. 02 CG Dornier aircraft also being deployed for air efforts pic.twitter.com/bAPC3a0eSe
— Indian Coast Guard (@IndiaCoastGuard) September 4, 2020