அண்மையில் தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் மாலுமிக்கு விளக்கமறியல் வழங்குமாறு சட்ட மாஅதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ள கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், குறித்த மாலுமிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்குமாறு குடிவரவு மற்றும் குயகழ்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வசிப்பிடத்தில் மாற்றம் ஏற்படுமாயின், அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் குறித்த மாலுமிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றையதினம் (28) காலை 9.30 மணியளவில் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் குறித்த மாலுமி ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சட்ட மா அதிபரினால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அது தொடர்பில் பிற்பகலில் அறிவிப்பதாக நீதவான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் MT New Diamond கப்பல் செப்டெம்பர் 03 ஆம் திகதி தீ விபத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.