இப்பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான Ameya என்ற கப்பலும் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
MT New Diamond கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் அதில் உள்ள எண்ணெய் கடலில் கலப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இந்திய கடலோர பாதுகாப்பு படை அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
2 லட்சத்து 70 ஆயிரம் டன் மசகு எண்ணெயுடன் பயணித்த குறித்த MT New Diamond கப்பல், நேற்று முன்தினம் காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.