"நாங்கள் அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வரும் நாட்களில் உச்ச நீதிமன்றத்தின் முன் சென்று சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம்."
இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த திர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன் அது குறித்த வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக குறித்த சட்டமூலமானது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதன்போது, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.