இது இலங்கை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நட்பு ரீதியாக சவூதி அரசு மேற்கொள்ளும் தற்காலிக நடவடிக்கையாகும்.
சவூதி அரசாங்கத்தின் இந்த முடிவு தற்போது நாட்டிற்கு அழைத்துவரும் பணியில் இருக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.
இந்த முடிவு இரு நாடுகளும் தற்போது அனுபவித்து வரும் வலுவான இருதரப்பு உறவுகளையும் குறிக்கிறது மட்டுமல்லாது, இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை சவூதி அரசுடன் கொண்டுள்ள செயலூக்கமான ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
கொரோனா தொற்று காலத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இவ்வாரான நலன்புரி நடவடிக்கைகள் மூலம் தங்கள் உதவிகளை வழங்கியதற்காக சவூதி அரசுக்கு தங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறது.