கண்டியில் - திகன உள்ளிட்ட பல இடங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணத்தை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த புவியியலாளர்கள் குழு தயாரித்த அறிக்கையின்படி, பூமியின் உட்புறத்தில் சுண்ணாம்பு அடுக்குகளுக்கு இடையில் உள்ள உந்துதலால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல கருத்து வெளியிடுகையில், எதிர்காலத்திலும் இதுபோன்ற அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
எனினும், அது குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் அந்த பகுதிகளில் கட்டிடங்களை நிர்மாணிக்க புவியியல் ஆய்வு பணியகத்தின் அனுமதியை பெறுவது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார்.