நாடாளுமன்றத்தில் இன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் என்னை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவதற்காக என்மீது சுமத்திய போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நான் தண்டிக்கப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். நான் அப்பாவி என்பது எனது மனச்சாட்சிக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர் நான் கறைபடியாத அரசியலில் ஈடுபட்டவன் எனது அரசியல் வாழ்க்கையில் நான் எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கமும் அதன் நீதியமைச்சரும் CIDயினருமே நான் சிறையில் அடைக்கப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.