அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் பதவியுயர்வுக்கு ஏதுவாக உள்ள மொழிப்புமை பரீட்சைகளை நிறுத்த அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது.
இதுவரைக்காலமும் மொழிப்புலமை பரீட்சை எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமாக நடத்தப்படுகின்றது.
இது பாரிய நெருக்கடியை அரச சேவையில் ஏற்படுத்தியிருப்பதாகவும். பல ஊழியர்கள் சேவைக்காலத்திற்குள் பதவியுயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பை பெறமுடியாமலிருக்க தடையாக இது இருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்துள்ளன.
இந்நிலையில், குறிப்பிட்ட மணித்தியால பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தி தற்போதுள்ள முறையை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அரச சேவை, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
$ads={2}