ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்த ஞானசார தேரர்! முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்த ஞானசார தேரர்! முழு விபரம்!

அகில இலங்கை ஜாமிஅத்துல் உலமா நிர்வாக சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் தப்லீக் சித்தாந்தவாதிகள் என ஞானசர தேரர் தெரிவித்துள்ளார்..

கடந்த புதன்கிழமை (09) ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் தனது சாட்சியத்தை அளிக்கும்போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அவரின் முந்தைய சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய ACJU உட்பட 10 முஸ்லிம் தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி ஆணையம் ஞானசார தேரருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஜம்மிய்யாவை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் ஜாவித் யூசுப், ACJU உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைக் காண்பித்து, இவர்களில் வஹாபிசத்தை ஆதரிப்பவர்களை சுட்டிக்காட்ட முடியுமா என ஞானசார தேரரிடம் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஞானசார தேரர், மத அமைப்பின் தலைவரான ஆஷ் ஷேக் (முப்தி) எம்.ஐ.எம் ரிஸ்வி ஒரு தப்லீக் சித்தாந்தவாதியாக இருக்கும் நிலையில் அதன் துணைத் தலைவர் ஆஷ் ஷேக் ஏ.சி.எம் அகார் முஹம்மது  ஜமாத்-இ-இஸ்லாம் சித்தாந்தவாதியாக இருக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ACJU செயற்குழுவின் பல உறுப்பினர்கள் குறிப்பாக எம்.எம்.ஏ முபாரக், எம்.எம்.எம். முர்ஷித் மற்றும் எம்.எஸ்.எம். தாசிம் போன்றவர்கள் வஹாபி சித்தாந்தத்திற்கு உறுதுணையாக உள்ளனர்.

ACJU  உறுப்பினர்களில் 50 சதவீதமானவர்கள் வஹாபிசத்தின் கீழ் வரும் தப்லீக் சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் என அவர் கூறினார்.

சட்டத்தரணியின் மேலதிக கேள்விகளுக்கு பதிலளித்த ஞானசார தேரர், ACJU உறுப்பினர்களில் பெரும்பாலோர் தப்லீக் சித்தாந்தவாதிகள் என்பதால் படிப்படியாக இலங்கையில் ஒரு இஸ்லாமிய அரசை ஸ்தாபிப்பதாக சுட்டிக்காட்டினார். இதற்கு உதாரணமாக அண்மையில் அட்டுலுகம போன்ற பகுதிகளிலிருந்து நாட்டின் சட்டத்திற்கு முரணான சம்பவங்கள் நடந்தன என அவர் சுட்டிக்காட்டினார்.

$ads={1}

தொடர்ந்தும் பேசிய அவர்,

சவூதி அரேபியாவின் ரியாத்தில் அச்சிடப்பட்ட வஹாபி சித்தாந்தம் அடங்கிய புத்தகங்கள் இலங்கைக்கு தானாகவே எட்டியிருக்க முடியாது, இத்தகைய புத்தகங்கள் இலங்கையில் வாழும் பாரம்பரிய சூஃபி முஸ்லிம்களை சிங்கள சமூகத்திலிருந்து பிரித்து வஹாபிசத்தை நோக்கி ஈர்க்க முடியும்.

கொழும்பில் கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒரு தப்லீக் சித்தாந்தவாதியால் மேற்கொள்ளப்பட்டது என்பதை ஞானசர தேரர் குறிப்பிட்டார்.

ACJU இன் சட்டத்தரணி ஹலால் தயாரிப்புகளுக்கு தமது வெறுப்பை வெளிப்படுத்தும் காரணம் குறித்து ஞானசர தேரரிடம் வினவினார். அதற்கு பதிலளித்த அவர், ஹலால் தயாரிப்புகளை உட்கொள்வது முஸ்லிம்களின் உரிமை என்பதால் தனக்கு ஹலால் தயாரிப்புகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பதிலளித்தார்.

இருந்தபோதிலும், பல் தூரிகைகள் போன்ற நுகர்வோர் பொருட்களுக்கு கூட ஹலால் சான்றிதழைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணரவில்லை என ஞானசர தேரர் கூறினார்.

மேலும் சாட்சியமளித்த அவர், நுகர்வோர் பொருட்களுக்கு ஹலால் அங்கீகாரம் தேவையில்லை என்றும், SLS தரச் சான்றிதழ் போதுமானது என்றும் கூறினார்.

$ads={2}
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.