அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு மூலம் முறையான கல்வி மற்றும் திறன்கள் இல்லாமல் வறுமையில் வாடுவோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வேலை பெறுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- முறையான கல்வி இல்லாத அல்லது கல்வித் தரம் குறைந்த திறமையற்ற தொழிலாளர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்கள்.
- விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியில், 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
- சமுர்த்தி பெறாமல் சமுர்த்தி சலுகை பெற தகுதியுடைய குடும்பத்தின் வேலையற்ற உறுப்பினராக இருப்பது, அல்லது சமுர்தி சலுகைகளைப் பெறும் ஒரு குடும்பத்தில் வேலையற்ற உறுப்பினராக இருப்பது.
- வயதானவர்கள், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் அல்லது ஊனமுற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் வேலையற்ற உறுப்பினராக இருப்பது.
- விண்ணப்பித்த பகுதியில் நிரந்தர வதிவாளராக இருத்தல்.
yazhnews.com
பயிற்சி திட்டத்திற்கான தேர்வு
- ஒரு குடும்பத்திலிருந்து மேலே தகுதிகள் கொண்ட ஒரு நபர் மாத்திரமே கருதப்படுவர்.
- விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கு அருகிலுள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிக்கான அவர் தேர்வுசெய்த துறையின் அடிப்படையில், அவரது தொழில் திட்டம் முடிவு செய்யப்படும்.
- பயிற்சித் திட்டம் விண்ணப்பதாரரின் வசிப்பிட பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் அல்லது மிக அருகிலுள்ள பயிற்சி மையத்தில் நடத்த வசதிகள் அமைத்துக்கொடுக்கப்படும்.
- ஒரு வெற்றிகரமான பயிற்சியைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் அவர் வசிக்கும் பகுதியில் அல்லது மிக அருகிலுள்ள பகுதியில் பணியில் அமர்த்தப்படுவர்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
- மாத கொடுப்பனவாக, 6 மாத தொடர்ச்சியான பயிற்சித் திட்டத்தின் போது மாதாந்தம் ரூ .22,500 கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, பயிற்சியாளர்களுக்கு தனது சொந்த குடியிருப்புப் பகுதியில் நிரந்தர அரசு பதவி நியமனம் வழங்கப்பட்டு ரூ. 35,000 மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
- 10 ஆண்டுகளின் திருப்திகரமான மற்றும் தடையற்ற தொழில் சாதனைக்குப் பிறகு ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவார்கள்.
yazhnews.com
மேற்கூறிய அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், மேலும் லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் முயற்சிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை உடனடியாக நிராகரிக்கும்.
-அரசாங்க தகவல் திணைக்களம்