இலங்கையில்இன்றைய தினம் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு வந்த 03 பேருக்கும், மாலைத்தீவில் இருந்து வந்த 06 பேருக்கும், கட்டாரில் இருந்து வந்த 06 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் குவைட்டில் இருந்து வந்த இந்திய நாட்டவர் 05 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,092 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,879 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 201 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.