இலங்கையில் தேங்காயின் விலை அதிகரித்து செல்லும் நிலையில், அதன் விலையை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்களுக்கு தேங்காயை ரூபா. 60 க்கு வழங்க தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிலாபம் மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து தேங்காயை கொள்வனவு செய்து நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.