அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கால்நடை படுகொலைக்கு தடை விதிப்பதாக கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து SLPP எம்.பி.க்களும் பிரதமரை பாராட்டியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எனினும் இதுவரை உத்தியோகபூர்வ முன்மொழிவு எதுவும் பிரதமரால் சமர்ப்பிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் இந்த முன்மொழிவை முன்வைக்க அவர் எதிர்பார்க்கிறார், என்றார்.
கால்நடை படுகொலை தொடர்பான திட்டத்தை எப்போது, எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பிரதமர் தீர்மானிப்பார் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதிக்கப்படாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இறைச்சி பிரியர்களுக்கு நிவாரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.