அனர்த்த நிலையைக்கொண்டதாக கருதப்படும் கட்டிடங்களை அடையாளம் காண்பதற்கும், புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் தொடர்பில் விடயங்களைக் கண்டறிவதற்கு உள்ளூராட்சிமன்ற அதிகாரிகளுக்கு புவி சரிதவியல் அகழ்வு பணியகத்தினால் விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது.
கண்டியில் பூவெலிகட பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த பெரும்பாலான கட்டிடங்கள் உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் அனுமதியைப் பெற்ற கட்டிடங்கள் என அடையாளம் காணப்படிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கண்டியில் பூவெலிகடயில் இடிந்து விழுந்த கட்டிடம் தொடர்பில் கட்டிட ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இன்று மத்திய மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதன் உரிமையாளர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.