நாட்டில் மாடறுப்பினை தடை செய்யப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனையை நடைமுறைபடுத்த முன்னின்று செயற்பட தயாராக இருப்பதாக மகா சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அதன் உறுப்பினர்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டனர்.
மாடறுப்பினை தடை செய்யும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி ஒரு மாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.