பாலியல் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுபவர்களது ஆண்மையை இல்லாமல் செய்ய வேண்டும்! -இம்ரான் கான்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாலியல் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுபவர்களது ஆண்மையை இல்லாமல் செய்ய வேண்டும்! -இம்ரான் கான்


பாலியல் வல்லுறவுக்காரர்களை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும், ஆண்மையை இழப்பதற்கான இரசாயன பதார்த்தம் ஏற்ற வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.


பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் கடந்த வாரம் பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்த நிலையிலேயே பிரதமர் இம்ரான் கான் இதனைத் தெரிவித்துள்ளார்.


லாகூரின் கிழக்கு நகரில் அமைந்துள்ள வீதியில் சென்று கொண்டிருந்தபோது காரில் எரிபொருள் தீர்ந்த நிலையில் அந்தப் பெண் தனது பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்து லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி உட்பட பல நகர வீதிகளில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


"வல்லுறவுகாரர்களுக்கு எச்சரிக்கும் வகையிலான தண்டனை விதிக்கப்படவேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் அவர்கள் திறந்த வெளியில் வைத்து தூக்கிலிடப்பட வேண்டும்" என்றார் இம்ரான் கான்.

"‘கொலைகள் எவ்வாறு முதலாம் நிலை குற்றம், இரண்டாம் நிலை குற்றம், மூன்றாம் நிலை குற்றம் என வகுக்கப்படுகின்றதோ அதேபோன்று வல்லுறவுகளும் வகுக்கப்படவேண்டும். முதல்நிலை குற்றத்துக்கான வல்லுறவுக்காரர்களுக்கு இரசாயன பதாரத்தம் ஏற்றப்பட்டு அவர்களை முழுமையாக முடமாக்கவேண்டும்" என அவர் குறிப்பிட்டார்


இந்த சம்பவம் தொடர்பாக கடந்த வியாழனன்று 15 பேரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர். ஞாயிறன்று கைது செய்யப்பட்ட ஒருவர் தனக்கு அந்தக் குற்றச்செயலுடன் தொடர்பில்லை என்றார்.


அவர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளர். ஆனால், தனது சிம் கார்டை நண்பர் ஒருவர் பாவிப்பதால் இந்த வழக்கில் தனது பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த நண்பர்தான் பின்னர் சந்தேக நபராக காணப்பட்டார்.


இந்தக் குற்றச்செயலைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரை கைது செய்துள்ளதாக திங்களன்று பொலிஸார் தெரிவித்தனர். திங்களன்று கைதான ஷப்காத் அலி, தான் குற்றமிழைத்ததை ஒப்புக்கொண்டதாக மாகாண முதலமைச்சர் உஸ்மான் புஸ்தார் தெரிவித்தார்.


"அவரது மரபணு பரிசோதனை பொருந்துவதுடன் அவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேக நபரான அபித் அலியைக் கைது செய்வதற்காக எமது முழு அணியினரும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கின்றோம்" என்றார் புஸ்தார்.


பாதிக்கப்பட்டவரின் தவறு காரணமாகவே பாலியல் வல்லுறவு இடம்பெற்றதாகக் கூறியமைக்காக லாகூர் பொலிஸ் தலைமை அதிகாரி உமர் ஷெய்க் கடுமையாக விமர்சக்கப்பட்டதுடன் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.