தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில், நேற்றைய நிலவரப்படி ஒரு பவுண் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோன்று, ஆபரணத் தங்கத்தின் விலை 910 ரூபாவால் அதிகரித்து 91 ஆயிரத்து 660 ரூபாவாக விற்பனையாகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் துறை தேக்கமடைந்து அதிகளவானோர் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்திற்கு அதிக கேள்வி எழுந்தமையால் விலை அதிகரித்தது.