இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள போதிலும் இந்த தீர்மானம் அமுல்படுத்துவது இன்னும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தீர்மானம் எடுத்த நிலையில், அதற்கான சட்ட வரைபு இதுவரை தாரிக்கப்படவில்லை என்றும், அமைச்சரவையில் இதுபற்றி இன்னும் பேசப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
இருப்பினும் ஒருமாத காலத்திற்கு இந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.