சட்டவிரோதமான முறையில் நேற்று அதிகாலை, இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடல் மார்க்கமாக வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், மன்னார் – பள்ளிமுனைப் பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்படஉள்ளனர்.
இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரு வாரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு, அதன்முடிவுகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது