கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக தற்பொழுது திறக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.
பாடசாலை சுற்றாடலை கிருமி தொற்று நீக்குதல், கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நபர்களுக்கு இடையிலான இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சமூகத்தினரும் தற்பொழுது முழுமையாக கவனம் செலுத்துவதில்லை என்று சில பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் விசேடமாக பாடசாலை போக்குவரத்து சேவையை வழங்குதல், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் நேரடியாக தொடர்புபடும் போது இவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது பாடசாலை அதிகாரிகள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரிற்கு பொறுப்பானதாகும்.
அத்தோடு மாணவர்களின் சுகவீனம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி சுகாதார பாதுகாப்பு தொடர்பில் ஆக கூடிய வகையில் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் காரணமாக நாட்டில் கொவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் உலகின் ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை சிறப்பான நிலையில் காணப்படுகின்றது.