அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே,
89, கரவ்தெனிய, அங்குருவல்ல, ருவன்வல்ல என்ற முகவரியில் வசிக்கும் ஜனாப் I.H.M
ஹுசைன் என்ற சகோதரர் எமது ஜமாஅத் உறுப்பினர்களில் ஒருவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த 45 வயதுடையவர். மக்களுடன் நெருக்கமான உறவுடையவர்.மக்களுக்கு உதவக்கூடியவர். ஐந்து பிள்ளைகளின் தகப்பன்.
இவரது சிறுநீரகம் பழுதடைந்து ஒரு வருட காலமாக Dialysis செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் விஷேட வைத்தியர் A.W.M வாஸில் (Dr A.W.M Wazil - Consultant Nephrologist in National Hospital - Kandy) அவர்கள் மிக அவசரமாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதிபடுத்தியுள்ளார்.
எனவே சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக 3.5 மில்லியன் (35 இலட்சம்) ரூபாய் செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையை இவரது குடும்பத்தில் பெற்றுக்கொள்ள முடியாததால் தங்களது உதவியை நாடுகின்றனர்.ஆகையால் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி
இவரது உயிர் காக்க உதவுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.
வஸ்ஸலாம்
நன்றி.
Detail of Account:
I.H.M Hussain
A/C no: 8700006180
Commercial Bank
Ruwanwella