மக்களை ஏமாற்றுவதற்காக உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல காண்பித்து, பிச்சையெடுத்த ஜோடியொன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.
அந்த ஜோடிக்கு உண்மையிலேயே தீ காயங்கள் ஏற்படவில்லை. தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல முட்டையை பூசி அந்த ஜோடியினர் மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்துள்ளனர்.
திட்டமிட்டு இவ்வாறு பிச்சையெடுக்கும் இந்த ஜோடி, கெக்கிராவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
$ads={1}
இன்னும் சிலர், பிச்சை எடுப்பதற்காக, வாகனமொன்றின் ஊடாக, அனுராதபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த ஜோடியினர் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரின், ஆண் பிச்சைக்காரர் கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த மொஹமட் இக்பார் (வயது 43) என்றும் மற்றையவர் துஷாரி தமயந்தி ( வயது 43) என்றும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுது்திய போது, அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.