அவரிடம் கடந்த மூன்று நாட்களாக தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை விசாரித்து வந்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கை ஏற்கெனவே CBI விசாரித்து வருகிறது.
அதில், போதை தரும் மாத்திரைகளை அவர் பயன்படுத்தியதாக தெரிய வந்ததை அடுத்து, அவருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் சிலருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, இது தொடர்பான வழக்கை தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை தனியாக விசாரித்து வருகிறது.
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு ஒருபுறமும், அவருக்கு இருந்த போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சர்சை தகவல் மறுபுறமும் என இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எட்டி வருகிறது.
இதில் போதைப்பொருள் விவகாரத்தை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து வருகிறது.
சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரிடம் CBI போதைப்பொருள் தடுப்புத்துறை கடந்த சில நாட்களாக விசாரித்து வந்தன.
இதில் ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரை கடந்த 04ஆம் திகதி போதைப்பொருள் தடுப்புத்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து ரியா சக்ரவர்த்தியிடம் மூன்று நாட்களாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை விசாரித்து வந்த இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக அத்துறையின் துணை இயக்குநர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே, ரியா சக்ரவர்த்தியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ள அதிகாரிகள், முறைப்படி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவுள்ளனர்.
இந்த வழக்கில் ரியா கைது செய்யப்பட்டிருப்பது நீதியின் பரிதாபம் என்று அவரது வழக்கறிஞர் சதீஷ் மணிஷிண்டே தெரிவித்தார்.