கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் 21 மில்லியன் பிரஜைகளின் உரிமைகளை ஒரு நபரிடம் மாத்திரம் பெற்றுக்கொடுப்பது சாதாரண தன்மை உடையது இல்லை.
கோட்டாபய ராஜபக்ஷ தவறானவர், அவர் கொண்டுவரும் திட்டங்கள் முறையற்றது என நாங்கள் கூறவில்லை.
இந்த அதிகாரங்களை எதிர்காலத்தில் ஒரு தவறானவரிடம் கிடைக்குமாக இருந்தால் அது பாரிய பாதிப்பை ஏற்பட்டுத்தும். அந்தளவு பாரிய பிரச்சினைக்கு உரிய அதிகாரங்கள் இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வாறு பாரிய செலவில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் போது அதனை ஒரு வருடத்தில் அவர் கலைப்பது எந்த அளவிற்கு பொருத்தமானது” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.